2025 நவம்பர் 15, சனிக்கிழமை

கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் கணவனின் தொல்லை தாங்கமுடியாத மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய கணவன் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு  இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, கணவன் வெளியிடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று, தனது பிள்ளைகளை பார்க்க வீட்டுக்கு சென்ற கணவனால் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X