Niroshini / 2021 ஜூலை 18 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று, கணுக்கேணி கிழக்கு மக்கள் வந்தேறு குடிகள் என்று, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்களின் பிரதிநிதி என்ற வகையில் கணுக்கேணி கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (16), கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரைச் சந்திக்க சென்ற போது, கணுக்கேணி கிழக்கு மக்கள் வந்தேறு குடிகள் எனக் கூறினார் என்றார்.
இந்தக் கிராமத்தின் பூர்வீகக் குடிகளை வந்தேறு குடிகள் எனக் கூறியமையை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்த அமலன், பிரதேச செயலாளரின் கருத்து தொடர்பாக கிராம மக்கள் மிகுந்த கொதிப்படைந்துள்ளனரெனவும் கூறினார்.
இது தொடர்பாக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எவும், அவர்; தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago