Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களால், வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப்பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அத்துடன், அமைச்சரின் முறைகேடுகள் தொடர்பாக தாம் ஆதாரங்களுடன் ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிட்டுள்ள போதிலும், இதுவரை காலமும் அவருக்கெதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், அமைச்சரின் குடியியல் உரிமை பறிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச குற்றச்சாட்டுகள் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களும், இதன்போது மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago