2025 மே 09, வெள்ளிக்கிழமை

கண்ணிவெடி அகற்றும் பணிக்காக மேலும் 28 பேர் இணைப்பு

Niroshini   / 2021 ஜூலை 06 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாணத்தில், கண்ணிவெடி அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் டாஸ் நிறுவனத்தால், கண்ணிவெடி அகற்றும் பணிக்காக மேலும் 28 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவுபெற்று, களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி நிறுவனமானது, 415 ஊழியர்களைக் கொண்டு, 13 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் 28 பேர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X