Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூன் 27 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முகமாலை மேற்குப் பகுதியில், ஜப்பானிய அரசின் நிதியதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை, ஜப்பானிய பிரதிநிதிகள், இன்று திங்கட்கிழமை (27) பார்வையிட்டனர்.
முகமாலை பகுதியில், யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றும் பணிகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி பகுதியில் கண்ணிவெடி அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான டாஸ் (னுயளா) நிறுவனம், இப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க மற்றும் ஜப்பானிய அரசுகளின் நிதியுதவியுடன் மேற்கொண்டு வருகின்றது.
ஜப்பானிய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை, திங்கட்கிழமை (27) இப்பகுதிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய பிரதிநிதி சட்டோ டேக்பியுமி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய அதிகாரியான நிறேசா வெல்கம் ஆகியோர், கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன் இதன் பணிகள் மற்றும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
42 minute ago
51 minute ago