2025 ஜூலை 05, சனிக்கிழமை

கணினியை திருடியவர் சிக்கினார்

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

மடிக்கணனியைத் திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரின் இளைஞர் ஒருவரைக் செவ்வாய்க்கிழமை (15) இரவு, கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணீரூற்று கிழக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மடிக்கணினி திருடப்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளரினால் செவ்வாய்க்கிழமை செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த இளைஞரை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் குறிப்பிட்டனர்.

மாவட்ட செயலகத்தின் திவிநெகும திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றும் ஒருவரின் வீட்டிலேயே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர், தண்ணீரூற்று பிரதேசத்தில் உள்ள ஒருசில கடைகளில் மடிக்கணினியின் கடவுச் சொல்லை மறந்துவிட்டதாகவும் அதனை மாற்றித்தருமாறும் கேட்டுள்ளார்.

மடிக்கணினியின் கடவுச் சொல்லை நீக்குவது தொடர்பில் தண்ணீரூற்று பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் விசாரித்து வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இளைஞனை, தண்ணீரூற்று நெடுங்கேணி சந்தியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .