2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கனகபுரம் படுகொலை: சந்தேகநபரின் மறியல் நீடிப்பு

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில், பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பட்டப்பகலில் ஐந்து பிள்ளைகளின் தந்தையை வெட்டிப்படுகாலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான், இன்று (14) உத்தரவிட்டார்.

கனகபுரம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் ஒப்பந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், இரண்டு பேருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தில், அவரது மனைவியும் காயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகபர் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கிளிநொச்சி மாவட்ட நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .