2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கனகராயன்குளத்தில் வெடிபொருள்கள் மீட்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – கனகராயன்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிபொருள்கள், இன்று (20) விசேடஅதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.  

அப்பகுதியில் உள்ள காணி ஒன்றைப் புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வந்த நிலையில், நிலத்தில் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு, கனகராயன்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.  

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசேட அதிரடி படையினர் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 8 மோட்டார் செல்களை மீட்டுள்ளனர். 

நீதிமன்ற உத்தரவுடன் குறித்த வெடிபொருள்கள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .