Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கயவர்களால் பறிக்கப்பட்ட உயிர்கள் மீண்டும் அவ் உறவுகளுக்கு கிடைக்க வேண்டும்” என மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (15) வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் பல கண்ணீருக்கு மத்தியில் கலக்கத்துடனும், பல்வேறு துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மன்னார் மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் எம்மால் இயன்றவற்றை செய்வோம்.
காணாமல் போன உறவுகளைத் தேடித்திரிந்து, பல வகையான முயற்சிகளை எடுத்தாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையை கண்டு நான் மனம் வருந்துகின்றேன்.
கயவர்களால் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு சென்ற அந்த உறவுகள், உயிர்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago