2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’கரந்தாயில் கிணறு அமைக்கப்பட வேண்டும்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, கரந்தாய்க்குளப் பகுதியில் கிணறு, மலசல கூடம் அமைப்பதற்கான திட்டங்கள், துறைசார் அமைச்சுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனவென, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்ச அவர்,  கரந்தாய்க் குளம் ஆண்டு முழுவதும் வற்றாத நீரூற்றுடன் இருந்ததாக கூறினார். 

இப்பகுதியில் பிரதேச சபைக்குரிய மூன்று பரப்பு காணி உள்ளதாகத் தெரிவித்து அவர்,  இக்காணியில் கிணறு அமைப்பதன் மூலம் இயக்கச்சி உட்பட அயல் கிராமங்களுக்கான குடிநீர் வழங்கலை மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இத்தாவில் போன்ற முக்கிய இடங்களில் திறந்த கிணறுகள் அமைக்கப்படுகின்றன எனத் தெரிவித்ண அவர், இக்கிணறுகளில் இருந்து எதிர்காலத்தில் குடிநீர் வழங்கலை இலகுவாக மேற்கொள்ளலாம் எனவும் கூறினார்.

"அதனடிப்படையில், கரந்தாய்க் குளப் பகுதியில் கிணறு அமையுமானால் இப்பகுதிக்கான குடிநீர் வழங்கலை இலகுவாக மேற்கொள்ள முடியும். இதற்கான திட்டங்கள்தான் துறைசார் அமைச்சுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் வெற்றியடையுமானால்,கரந்தாய் பகுதியில் கிணறு, மலசல கூடங்கள் பிரதேச சபையால் அமைக்கப்படும்" எனவும்  தவிசாளர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X