Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் உள்ள கரியல் வயல்வெளியில் விவசாயிகளின் வயல் நிலத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
இது தொடர்பில், குறித்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், இந்த வயல்பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குள் உள்ளடக்கியுள்ளது.
அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், மாத்தளன் போன்ற பிரதேசங்களில் இருந்த கரையோர மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு நீர்ப்பாசன காணிகள் இல்லை என்ற காரணத்தால் 1967ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கரியல் வயல்வெளியில் மூங்கிலாற்று தண்ணீரை மறித்து விவசாயம் செய்வதற்காக தலா மூன்று ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டு வரை இந்த பகுதியில் விவசாயம் செய்துவந்துள்ளார்கள். அப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக குறித்த பகுதிக்குள் செல்லமுடியவில்லை. இந்நிலையில், 2009ஆம் ஆண்டு போரின் பின்னர் 2012ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றப்பட்டுள்ளோம். அதுவரை எங்கள் நிலங்களை சென்று பார்வையிட முடியவில்லை.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயம் செய்துவந்துள்ளோம். இந்நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அதிகளவான மணல்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு எங்கள் வயல் நிலங்களில் காணப்படுகின்றன.
கடந்தாண்டும், அதிகளவான வயல் நிலைங்களைத் தோண்டி மணல் ஏற்றியுள்ளார்கள் பல தரப்புக்கு முறையிட்டும் எதுவித பயனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தற்போது அண்மையில் மண் கொள்ளையர்கள் எங்கள் வயல் நிலங்களைத் தோண்டி மணல் ஏற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்கள்.
இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வயல் நிலங்களின் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
36 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago