Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மே 02 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா, புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாமடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை, பொலிஸாரால் இன்று (02) அதிகாலை முறியடிக்கப்பட்டது.
அப்பகுதியில் மரக்கடத்தல் நடவடிக்கை இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அங்கு சென்ற பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, கருங்கற்களுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் முதிரைக் குற்றிகளை கடத்திச்செல்ல முற்பட்டமை தெரியவந்தது.
பொலிஸாரைக் கண்டதும் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும், 43 முதிரைக்குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பிச்சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025