2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கரைச்சி பிரதேச சபை அமர்வில் பொலிஸார்

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் 

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் பொலிஸார் வரவழைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று (28) இடம்பெற்றது.

இதன்போது, ஆதனவரி பற்றி உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினருக்கும் தவிசாளருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

கருத்து முரண்பாட்டின் தொடர்ச்சியாக பொலிஸார் சபைக்கு அழைக்கப்பட்டனர்.

பொலிஸார் சபை மண்டபத்துக்குள் வந்தமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸார் சபையிலிருந்து வெளியேறினர்.

இதனையடுத்து சபை முதலில் 30 நிமிடங்களும் பின்னர் 5 நிமிடங்களும் ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .