Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 15 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், எம்.றொசாந்த்
கிளிநொச்சி சுகாதாரச் சேவை காரியாலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களின் விவரங்களை, கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கோரியுள்ளனர்.
கடந்த மாதம் 22ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில், கிளைமோர், புலிகளின் சீரூடை மற்றும் புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலான பின்னணியிலேயே, இவ்வாறு கர்ப்பிணி பெண்களின் விவரங்களை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இவ்வருடம் மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலத்தில், குழந்தையைப் பிரசவித்த கர்ப்பிணிப் பெண்களின் விபரங்களே, கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இது குறித்து கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .