2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’கர்மா விடாது’ வவுனியாவில் தொடர்கிறது

Freelancer   / 2022 மே 24 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

தமிழ் அரசியல்வாதிகளையும் 'கர்மா விடாது' என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும்  தொடர்ச்சியான போராட்டம்,  நேற்றையதினத்தோடு 1919 நாளை எட்டியுள்ளது.

இதனையொட்டி,  நேற்று (23) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள்,  வடக்கு- கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறு,  சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்ததால் , இலங்கை பொருளாதாரத்தின் 15 சதவீத செலவீனம் இதுவாகும்.

இது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாகும். இதனைத்தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும். 

'ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க,   ஐரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள்,  சிவில்அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும். இல்லாவிடில்,  கர்மா அனைவரையும் பாதிக்கும்.
 
'சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளாக பேசுவார்கள். இதுதான் 74 வருட தமிழர்களின் வரலாறு. நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றிபேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப் படுகொலைக்கான நீதியை பெறமுடியாது' என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X