Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
மக்களின் வீட்டித்திட்ட தேவைகளுக்காக கருங்கல் ஏற்றவரும் தமக்கு, கருங்கல்லை தராமல் கம்பனிகளுக்கு முதலிடம் வழங்குவதாக தெரிவித்து லொறி சாரதிகள், கருங்கல் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு எதிராக இன்று சனிக்கிழமை (15) முன்னெடுத்த வீதிமறியல் போராட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் பதற்ற நிலை நிலவியது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள கருங்கல் உடைக்கும் நிறுவனம், உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக முல்லைத்தீவு அடங்கலாக வடமாகாணத்தின் மக்களுக்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வேலைகளுக்காக கருங்கல் ஏற்றுவதற்காக வருகைதந்து வெகுநேரமாக நிற்கும் தமக்கு பொருட்களை வழங்காமல், கம்பனிகள் சிலவற்றுக்கு வருவதாக கூறி, லொறி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம் ஆறு ஏழு நாட்கள் காத்திருப்பதாகவும் இதனால் தமது உணவு உள்ளிட்ட செலவுகள் அதிகரிப்பதாகவும் லொறி சாரதிகள் தெரிவித்தனர். இதனால், மக்களுக்கு குறைந்த விலையில் கற்களை விற்க முடியாதுள்ளதகாவும் இங்கு வந்து கல்லை பெற்றுக்கொள்ளும் கம்பனிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கே குறைந்த செலவில் கற்களை விற்பனை செய்வதாகவும் இதனால் தங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கூலித் தொழிலாளியாகவும் சாரதியாகவும் கடமையாற்றுபவர்கள், ஆறு நாளுக்கு ஒருதடவை ஒருலோட் கல்லை கொண்டுசெல்வதால், ஆறு நாளுக்கு ஒருதடவையே ஒரு நாள் சம்பளம் பெறுவதால், தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் வாகனங்களை லீசிங்கில் பெற்றவர்கள் அதனை செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.
இதைனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் திரு து.ரவிகரன், சாரதிகளுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டு உரிய நிறுவன அதிகாரிகளுடன் சென்று கலந்துரையாடினார்.
கம்பனிகளின் ஒரு டிப்பருக்கு கல் ஏற்றப்பட்ட பின்னர், தங்களது டிப்பர் ஒன்று கல் ஏற்றுதல் என்ற அடிப்படையில் கற்களை கொண்டுச் செல்வதற்கு, லொறி சாரதிகள் அனுமதி கோரிய போதும், கற்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அதற்கு இணங்காமையால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மாகாணசபை உறுப்பினரும், சாரதிகளுடன் கலந்துரையாடி, சாரதிகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு 3 நாட்கள் அவகாசம் கோரினர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago