Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
இந்த ஆண்டு சிறுபோக காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட களைநாசினிகள் உரிய பலனைத் தரவில்லையென கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்திலே இம்முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையான சிறுபோக காலத்தில் களைநாசினிகள் வயலில் பயன்படுத்தப்பட்டபோதும் அவை களைகளை கட்டுப்படுத்தவில்லை. இதனால் நெற்செய்கையில் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டது.
எனவே, இனிவரும் காலபோக நெற்செய்கையில் களைநாசினிகளின் தரத்தை உறுதிப்படுத்தியதன் பின்னரே, களை நாசினிகளை பெற்றுத்தருமாறு விவசாயிகள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago