Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூலை 09 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி கிளிநொச்சி கரைச்சி பிரதேச கிளிநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை நடத்தி இருந்தனர்.
இப்போராட்டத்துக்கு அரச அதிகாரிகள் யாரும் வந்து தமக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கும் அந்த மக்கள் தமக்கு ஒரு முடிவை தெரிவிக்கும் வரை தாம் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கின்றனர்
அரசியல்வாதிகள் தரப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தம்மோடு வந்து கலந்துரையாடி சென்றதாகவும் இதற்கு பதில் சொல்லக் கூடிய அரச அதிகாரிகள் தமது கருத்தினை கூட கேட்காமல் இருப்பது கவலை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்
இப் பிரச்னைக்கு பதிலளிக்கக் கூடிய நிலையில் இருக்கும் அரச உத்தியோகத்தராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரே இருப்பதாகவும் அவர் தமக்கு நல்ல பதிலை அளிக்க வேண்டும் குறைந்தது பத்து நாட்களுக்குள் தம்மை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி வழங்கினால் மட்டுமே தமது போராட்டத்தை கைவிட முடியும் என தெரிவித்தனர்
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் தொலைபேசி மூலம் வினவிய போது தான் அரச கடமையின் நிமித்தம் கொழும்புக்கு கலந்துரையாடல் ஒன்றிற்கு சென்றிருப்பதாகவும் அதனால் நிலைமையை ஆராய முடியாமல் இருப்பதாகவும் தான் இக் காணிப் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே பலதரப்பட்டவர்களுடன் பேசி இருப்பதாகவும் தமது அலுவலர் ஒருவரை அனுப்பி நிலைமையை ஆராய்வதாக தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago