Niroshini / 2021 நவம்பர் 10 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இளம் தொழில் முனைவோருக்கான காணித்துண்டுகள் வழங்கும் நேர்முக தேர்வு, நாளை (11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தெரிவித்தார்.
தொழில் முனைவோருக்கான காணிக்காக விண்ணப்பம் செய்து கொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட நேர்முக தேர்வுகள் கிராம சேவகர் பிரிவு ரீதியில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பித்தவர்கள் கிராம உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களை பெற்றுக்கொண்டு, கலந்துகொள்ளுமாறும், பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, நாளை விசுவமடு மேற்கு - விசுவமடு கிழக்கு கிராமத்திலும்
16ஆம் திகதியன்று, மாணிக்கபுரம் - உடையார்கட்டு வடக்கு கிராமத்திலும்,
17ஆம் திகதியன்று, புதுக்குடியிருப்பு மேற்கு - உடையார்கட்டு தெற்கு கிராமத்திலும்,
19ஆம் திகதியன்று, வள்ளுவர்புரம், சுதந்திரபுரம், தேராவில், வள்ளிபுனம் கிராமங்களிலும்
24ஆம் திகதியன்று, தேவிபுரம், கோம்பாவில் கிராமங்களிலும்,
25ஆம் திகதியன்று, புதுக்குடியிருப்பு கிழக்கு, மல்லிகைத்தீவு, மந்துவில் கிராமங்களிலும்,
26ஆம் திகதியன்று, இரணைப்பாலை, ஆனந்தபுரம், சிவநகர், மன்னாகண்டல் கிராமங்களிலும் நேர்முகதேர்வு நடைபெறவுள்ளது.
நேர்முக தேர்வில் சமூகமளிக்க வேண்டியோர் விவரங்கள், தேருனர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக, தங்கள் பகுதி கிராம அலுவலர் அலுவலகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு, கிராம அலுவலகரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த தினத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு, வேறு சந்தர்பம் வழங்கப்படமாட்டாது என்றும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 minute ago
36 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago
58 minute ago