2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

’காணிப் பிணக்கு விரைவில் தீர்க்கப்பட வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

“கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி சுகாதாரப் பணிமனைக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கும் இடையில் காணப்படுகின்ற காணிப் பிணக்கு, விரைவில் தீர்க்கப்பட வேண்டும்” என,  பச்சிலைப்பள்ளி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“சுகாதாரப் பணிமனைக்கும் பிரதேச சபைக்கும் இடையில், நீண்ட காலமாகக் காணிப் பிணக்குக் காணப்படுகின்றது.

“இதன் காரணமாக, சுகாதாரப் பணிமனையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது.

“பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், காணிப் பிணக்குகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில், அதிகாரிகளாகிய நாம் இடமாற்றம் பெற்றுச் சென்று விட்டால், காணிப் பிரச்சினை தொடர்ந்து இழுபறி நிலை காணப்படும்.

“பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, சுகாதாரப் பணிமனைக்கும் பிரதேச சபைக்கும் இடையில் காணப்படுகின்ற காணிப் பிணக்குளைத் தீர்ப்பதற்கு, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X