2025 மே 22, வியாழக்கிழமை

‘காணிப் பிரச்சினைகள் தீராத பிரச்சினைகளாக உள்ளன’

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கில், காணிப் பிரச்சினைகள் தீராத பிரச்சினைகளாக உள்ளனவென, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி.நவரட்ணம் ரஞ்சனா தெரிவித்தார்.

நேற்று (05) நடைபெற்ற மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு ​தொடர்ந்துரைத்த அவர்,. மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தனி அங்கத்தவர்களுக்கு வீடுகள் கிடைக்காமல் இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்கள், நாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தன்னிடம் தெரிவித்து வருவதாகவும் தனி அங்கத்தவர்களுக்கு வீடுகள் கிடைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தமது பிரதேச செயலாளர் பிரிவில், பண்பாட்டு மண்டபம் இல்லையெனத் தெரிவித்த அவர், பொது மைதானம் இல்லையெனவும், இவை அமைக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

தமது பிரதேச செயலாளர் பிரிவில், ஆளணி வெற்றிடங்கள் பல காணப்படுவதாச் சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர்களுக்கு கஷ்ட, அதிகஷ்ட கொடுப்பனவுகள் வழங்குவதை போன்று, மாந்தை கிழக்கில் பணிபுரிகின்ற ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கும் அக்கொடுப்பனவுகள் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .