2025 மே 19, திங்கட்கிழமை

காணியற்ற மக்களுக்கு காணி வழங்கத் தீர்மானம்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலங்கள் ஊடாக காணிகளை வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்வதென, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வவுனியா மாவட்டச் செயலகத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தர்மபால செனவிரத்ன தலைமையில், இன்று (17) நடைபெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலங்கள் ஊடாக காணிக் கச்சேரி நடத்தி காணிகள் வழங்குவதாக ஏற்கெனவே மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லையென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இதையடுத்து, வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் 1400 பேரும் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் 2427 பேரும், வவுனியா வடக்கில் 316 பேரும் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாக பிரதேச செயலாளர்களால் தெரியப்படுத்தப்பட்டது.

அத்துடன், வனவளத் திணைக்களத்தின் அனுமதி முழுமையாகக் கிடைக்காமையால், குறித்த காணிகளை மக்களுக்கு கையளிக்க முடியாமல் இருப்பதாகவும் பிரதேச செயலாளர்கள் தெரிவிதத்னர்.

இதையடுத்து, குறித்த காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கு வனவளத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த காணியின் விவரங்களைத் தருமாறும் அதற்கான அனுமதியைப் பெற்றுத்தருவதாகவும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுபர்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

இந்நிலையில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X