Niroshini / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், நீண்ட காலமாக, துப்புரவு செய்யப்படாத காணிகளை துப்புரவு செய்யுமாறு, பிரதேச செயலகத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
துப்புரவு செய்யப்படாதுள்ள காணிகளின் உரிமையாளர்களின் பெயர் விவரங்கள் கிராம அலுவலர் அலுவலகங்களிலும் முக்கிய இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, பிரதேச செயலகத்தின் அறிவித்தலை ஏற்றுக்கொண்ட பல காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளைத் துப்புரவு செய்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காணிகளைத் துப்புரவு செய்து, பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் நடைமுறைக்கேற்ப உதவிகளை வழங்க வேண்டும் எனவும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற குடும்பங்களுக்கு பயிர்ச் செய்கைக்கான விதைகளை பெற்றுக் கொடுப்பதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காணிகளைத் துப்புரவு செய்கின்ற குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
26 minute ago
32 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
54 minute ago
2 hours ago