2025 மே 21, புதன்கிழமை

காணி விடுவிப்புக் கோரி ஆளுநருக்கு கடிதம்

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், படையினர் வசமுள்ள 4,207.2 காணிகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வடக்கு மாகாண ஆளநர் சுரேன் ராகவனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணி விடுவிப்பு குறித்து, சிவஞானம் சிறிதரன் எம்.பியால், ஆளுநருக்கு நேற்று (02) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 2,119.7 ஏக்கர் வரையான அரச காணிகளும் 2,088.13 ஏக்கர் தனியார் காணிகளும் உள்ளடங்கலாக, சுமார் 4,207.2 ஏக்கர் காணிகள் படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், கடற்படையினர் வசமுள்ளதகாவும், அவர் அக்கடிதத்தில், மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி காணிகள் யாவும் அரச திணைக்களங்களாலும் பொதுமக்களாலும் விடுதலைப்புலிகளாலும் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளெனத் தெரிவித்துள்ள அவர், மேற்படி காணிகளை படையினர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்துள்ளதால், மாவட்டத்தில் நகர வடிவமைப்பைக் கட்டமைப்பதற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவையை மக்கள் மயப்படுத்துவதற்கும் இடையூறாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருப்பதற்கான காணிகள் இன்றியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எனவே, அக்காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .