Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு - கோயில்மோட்டை பகுதியில் உள்ள மடு தேவாலயத்துக்கான 50 ஏக்கர் விவசாய காணியின் 5 ஏக்கர் காணியில், மடு தேவாலயம் சார்பாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என, மன்னார் மறைமாவட்ட காணி பொறுப்பாளர் அருட்பணி இ. அன்டனி சோசை அடிகளார் தெரிவித்தார்.
ஏனைய காணிகளில், 27 விவசாயிகள் குத்தகை அடிப்படையில் இவ்வளவு காலமும் மடு தேவாலயத்துக்கு குத்தகையை செலுத்தியே விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர் எனவும், அவர் கூறினார்.
கோயில்மோட்டை பகுதியில் உள்ள விவசாய காணி தொடர்பாக நீண்ட காலம் இடம்பெற்ற கருத்து முரண்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்ததிப்பு, நேற்று (28) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அண்மையில், காணி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கடந்த வருடத்தை போன்று மடு பரிபாலகரினால் அவ்விடத்தில் 5 ஏக்கர் காயிணில் விவசாயம் செய்யப்படவும், ஏனைய காணிகளில் ஏனைய விவசாயிகள் மேற்கொண்டு வந்தது போன்று 2 ஏக்கர் வீதம் விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்கவும் அதிகாரிகளுக்கு பணித்தார் என்றார்.
'காணி ஆணையாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக, நாங்கள் குறித்த காணியில் இந்தக் கால போகத்திலே விவசாயம் செய்ய வேண்டும்.
'நாங்கள் 5 ஏக்கர் காணியில் மேற்கொண்டு வரும் விவசாயத்தில் கிடைக்கும் பணத்தில் மடு தேவாலயத்தின் அபிவிருத்தி பணிக்காகவும் பிறர் நல சேவைக்காகவும் சிறுவர் காப்பகங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் கால காலமாக நிதியை பயன்படுத்தி வருகிறோம்.
'ஏற்கெனவே காணி ஆணையாளர் நாயகம் அவர்களால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக தற்போது குறித்த விவசாய காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 27 பேரும் தங்களது கால போக பயிர்ச் செய்கையின் பிற்பாடு, அவர்கள் குத்தகையாக மடு தேவாலயத்துக்கு குத்தகையை செலுத்த வேண்டும் என காணி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்' எனவும், அன்டனி சோசை அடிகளார் தெரிவித்தார்.
குத்தகை மூலம் கிடைக்கின்ற அனைத்து நிதியையும் பிறர் நல சேவைக்காகவும்,சிறுவர் இல்லங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்யவும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது எனவும், அவர் தெரிவித்தார்.
மேலும், குறித்த காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 27 விவசாயிகள் உர சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இவ்வளவு காலமும் காணி உரிமையாளராக மடு தேவாலயம் என்று குறிப்பிட்டு, ஆவணம் தயாரித்து உரச் சலுகையையும் பெற்று வந்துள்ளனர் எனவும், அவர் கூறினார்.
மேலும் குறித்த 27 விவசாயிகளும் தங்களது கையினால் எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் 'மடு தேவாலயத்துக்;குச் சொந்தமான கோயில்மோட்டையில் உள்ள வயல் காணியை, விவசாய செய்கைக்கு குத்தகைக்கு தந்து உதவும் படியும் குத்தகையாக ஒரு காணிக்கு ஒரு மூட்டை நெல் கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்குவதாகவும் தங்களின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடப்போம் என கூறிக் கொள்கிறோம்' என விவசாயிகள் தங்களது கையொப்பத்துடன் கடிதத்தை சமர்ப்பித்து உள்ளதாகவும்' அன்டனி சோசை அடிகளார் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
39 minute ago