Editorial / 2019 பெப்ரவரி 20 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில், இன்று (20) சமர்ப்பிக்கப்படவுள்ளது என, அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 320 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் தெரிவு செய்யப்பட்ட ஆறு எழும்புக்கூடுகளின் மாதிரிகள், கார்பன் பரிசோதனைக்காக, அமெரிக்கா புளோரிடாவிலுள்ள ஆய்வகத்துக்கு கடந்த மாதம் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், 5 மனித எச்சங்களின் கார்பன் அறிக்கையை கடந்த 16ஆம் திகதி சமிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த கார்பன் பரிசோதனை அறிக்கை, இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
25 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago