2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கார்பன் பரிசோதனை ஆய்வறிக்கை வெளியாகும்

Editorial   / 2019 பெப்ரவரி 16 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டு, ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான கார்பன் பரிசோதனை ஆய்வறிக்கை, இன்று (16) வெளியாகிவுள்ளது.

இந்த கார்பன் பரிசோதனை ஆய்வறிக்கை, எதிர்வரும் புதன்கிழமையன்று, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து, தொடர்ச்சியாக எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை (14), 145ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது, சந்தேகத்துக்கிடமான சிறுவருடைய மனித எலும்புக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்‌ஷதெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 307க்கும் மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X