Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியிலுள்ள கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான கட்டடடம் ஒன்றில் காலாவதியான பழச்சாறு, மென் பானங்களைப் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள நிலையில், சிறுவர்கள் அதனை உட்கொள்ளும் அபாய நிலை காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
உமையாள்புரம் பகுதியில் அமைந்துள்ள கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்துக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் காலாவதியான பழச்சாறுகள் சோடா வகைகள் உள்ளிட்ட மென்பானங்கள் பாதுகாப்பற்ற முறையில் கஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, 2015ஆம் ஆண்டுடன் காலாவதியான பானங்களே இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்றன.
குறித்த கட்டடத்தின் கதவுகள் திறந்த நிலையில் பாதுகாப்பின்றி காணப்படுவதாகவும் இதனால் அந்தப் பிரதேசங்களில் உள்ள சிறுவர்கள் அதனுள் சென்று விளையாடுவதுடன், இவ்வாறான பானங்களை உட்கொள்ளும் அபாய நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்தாண்டு முற்பகுதியில் குறித்த கட்டடத்தில் உள்ள பழச்சாறை பலர் உட்கொண்டதால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago