2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து இருப்பதன் காரணமாக, கால்நடைகள் பிரதான வீதிகளுக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு பண்ணையாளரகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்திய பொலிஸார், கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுமிடத்து, குறித்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த பொலிஸார், பரந்தன் - முல்லைத்தீவு வீதி, புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதி, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதி, மாங்குளம் - மாந்தைக் கிழக்கு - துணுக்காய் வீதிகள், முள்ளியவளை - நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு - கொக்குளாய் வீதி, முல்லைத்தீவு - குமுழமுனை வீதி ஆகியவற்றுக்கு அருகில் பெருமளவான கால்நடைகள் வளர்க்கப்படுவதாகவும் கூறினர்.

இவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளைத் திறந்து விடும் போது, அவை வீதிகளிலே உலாவுவதன் காரணமாக, தொடர்ச்சியாக விபத்துகள் இடம்பெறுகின்றனவெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, கால்நடை உரிமையாளர்கள், தமது கால்நடைகளை வீதிகளில் இருந்து தூர இடங்களுக்குக் கொண்டு சென்று, மேய்ச்சலில் ஈடுபடுத்துமாறும், பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X