Niroshini / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக, கால்நடை இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில், மேய்ச்சல் தரவை இல்லாமையால், மாடுகளை இழந்துவரும் பண்ணையாளரான தங்கவேலு சுரேந்திரனை நேரில் சந்தித்த நிலைமைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன், இராஜாங்க அமைச்சருடன் பேசியதன்; பின்னர், கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், உடனடியாக இந்தக் கால்நடைகளைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் தேவை என்ற அடிப்படையில், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் பேசி, இந்த வாரத்துக்குள் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக, இராஜாங்க அமைச்சர் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.
அதாவது, சேலைன்களைக் கொடுப்பதற்கு அல்லது குறைந்தபட்சம் புற்களையாவது மற்ற மாவட்டங்களிலிருந்து எடுத்து கொடுக்க கூடிய வகையில், ஏதாவது ஒரு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளப்படுமென, அங்கஜன் இராமநாதன் மேலும் கூறினார்.
16 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
14 Nov 2025