Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - புளியங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து, இன்று (22) காலை, இராணுவத்தினரால் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, புளியங்குளம் - பெரியமடு விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து, இந்த ஆயுதங்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்பொது, தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81 எம்.எம். ரக குண்டுகள் - 11, டி 56 ரக துப்பாக்கிகள், மிதிவெடிகள் உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தேடுதலானது, ஓமந்தையின் 563ஆவது பிரிகேட்டின் கேணல் பண்டுக்க பெரேரா, புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி நிசாந்த ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago