2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கிணற்றில் இருந்து இளம் தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 27 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - மல்லாவி.  அனிஞ்சியன்குளம் பகுதியில், கிணற்றில் இருந்து, கணவன், மனைவியின் சடலங்கள், இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன் (வயது 31), பிரதீபன் மாலினி (வயது 27) ஆகியோரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் திருமணத்துக்க முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் திருமணம் செய்துள்ளனர் எனவும். இவ்விருவரும் திருமணமாகி 10 மாதங்களே ஆகின்றன எனவும், மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

 இவர்கள், கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X