2025 மே 05, திங்கட்கிழமை

கிணற்றில் இருந்து வெடிபொருள் மீட்பு

Niroshini   / 2020 நவம்பர் 18 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - தம்பனைச்சோலை பகுதியில், இன்று கிணற்றில் இருந்து வெடிபொருள் மீட்டுள்ளதாக, வவுனியா பொலிஸார் கூறினர்.

குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கிணற்றை நீண்ட நாள்களுக்குப் பின்னர் அதன் உரிமையாளர் துப்புரவாக்கியுள்ளார்.

இதன்போது சேற்றில் புதைந்திருந்த நிலையில் ஆர்பீஜி செல் ஒன்று இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், ஆர்பீஜி செல்லை மீட்டுள்ளதுடன் குறித்த கிணற்றினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுடன் தேடுதல் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X