2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிணற்று நீரை எடுப்பதற்கு இராணுவம் அனுமதி

Niroshini   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி,  இயக்கச்சியில் இராணுவ வசமுள்ள உள்ள பொதுக் கிணற்றை, பிரதேச சபையிடம் கையளிக்காமல், பிரதேச சபை முன்னுரிமை அடிப்படையில் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளலாமென்று, இராணுவம் அறிவித்துள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இயக்கச்சியில் உள்ள குடிநீர்க் கிணற்றை இராணுவம் பயன்படுத்தி வருவதாகவும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையிடம் குறித்த குடிநீர் கிணறு கையளிக்கப்படுமென்று கடிதம் அனுப்பப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

தாமும் குறித்த கிணற்றைச் சென்று பார்வையிட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆரம்பத்தில் கிணற்றை கையளிப்பதாக, , இராணுவம்  தெரிவித்திருந்ததாகவும் ஆனால், இதுவரை கிணறு கையளிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

இதன் காரணமாக, இயக்கச்சி பகுதியில் குடிநீர் வழங்கலை மேற்கொள்வதில் நெருக்கடிகள் காணப்படுகின்றன எனவும் ஆனால், குறித்த கிணற்றில் இருந்து இராணுவம் தூர இடங்களுக்கும் நீர் எடுத்து செல்கின்றது எனவும், சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X