2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிரவல் அகழ்வு தொடர்ந்து முன்னெடுப்பு

Editorial   / 2019 மே 24 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - புத்துவெட்டுவான் முதிரைச்சோலைப் பகுதியில், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் அகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக, பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் கொக்காவில் காட்டுப்பகுதியில் பெருமவான கிரவல் அகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற முதிரைச்சோலை பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் இந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட பெறுமதியான மரங்களும் அழிக்கப்பட்டன.

குறிப்பிட்ட காலம் நிறுத்தப்பட்டிருந்த கிரவல் அகழ்வுகள் அண்மைய நாள்களாக மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கொக்காவில் -ஐயன்கன்குளம் வீதி சேதமடைந்து வருவதாகவும், பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .