2025 மே 22, வியாழக்கிழமை

கிராம சக்தி கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், கிராம சக்தி கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

2018ஆம் ஆண்டில் கிராம சக்தி திட்டத்துக்காக 12 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டன. இந்தஆண்டில் 36 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் 50 வீதமானவை வாழ்வாராதத் தேவைக்கும் 20 வீதமானவை பொருளாதார உட்கட்டுமான அபிவிருத்திக்கும் மிகுதி முப்பது வீதம் தொழிற்பயிற்சிகள், தொழில்வாய்ப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அக்கராயன் கிராம அலுவலர் பிரிவு, பல்லவராயன்கட்டு கிராம அலுவலர் பிரிவுகளில் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளரான அ.கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பி.அமலராசா மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கிராம சக்தி திட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விளக்கமளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X