Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 10 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயுங்கள் என கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட சம்மேளனம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நாட்டில் ஏற்பட்ட பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விவசாய உள்ளீடுகள் மீதான இறக்குமதிக்குத் தடை, உள்நாட்டு வர்த்தகர்களின் பதுக்கல் வியாபாரம், கட்டுப்பாடற்ற விலை நிர்ணயம் என்பவற்றால் மிக மோசமாக பாதிப்படைந்த நாம், தொடர்ந்து விவசாய செய்கையில் ஈடுபட முடியாத நிலையில் எமது வளமான நிலத்தையும் நீரையும் பயனற்றதாக்கி விடுவோமோ என்று அச்சம் அடைய வைக்கின்றது.
தற்போது மிகவும் பிரயாசப்பட்டு உற்பத்தி செய்த நெல், சராசரியாக ஒரு கிலோ கிராமுக்கு ரூபாய் 110.00 உற்பத்தி செலவாகின்றது. இந்த நெல்லை தற்போது தனியார் வர்த்தகர்கள் ஒரு கிலோ கிராமுக்கு 66.00 ரூபாய்க்குத்தான் கொள்வனவு செய்கின்றார்கள் (ஈர நெல்). இது எம்மை மிக மோசமாக பாதிக்கின்றது.
இவ்விடயத்தை நாம் துறைசார் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. தயவு செய்து தாங்கள் விவசாயிகளாகிய எமது வாழ்வியலை கவனத்தில் கொண்டு, பின்வரும் விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம்.
நெல்லிற்கு உத்தரவாத விலையை நிர்ணயித்தல், நெல் சந்தைப்படுத்தும் சபை நெல் கொள்வனவு செய்ய உடன் நடவடிக்கை மேற்கொள்ளல், தனியார் நெல் கொள்வனவாளர்களையும் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளல்.
மேற்படி விடயங்களில் தாங்கள் நேரடியாக கவனம் கொண்டு, விவசாயிகளையும் நாட்டின் உணவு உற்பத்தியையும் பாதுகாக்க பணிவோடு வேண்டி நிற்கின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago
2 hours ago
3 hours ago