2025 மே 17, சனிக்கிழமை

கிளிநொச்சியில் கடந்த ஒரு வாரத்தில் ஐவருக்கு டெங்கு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி மாவட்ட பொது  வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் திணைக்கள சாரதி உட்பட ஐவருக்கே, டெங்கு காச்சல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள்  அனைவரும் கொழும்புக்கு சென்று வந்ததன் பின்னரே அவர்களுக்கு டெங்கு காச்சல் ஏற்பட்டுள்ளது என, வைத்தியசாலை  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, டெங்கு காய்ச்சல் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு டெங்கு காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக குறித்த  நோயாளியின் வீட்டுக்கு செல்லும்  தொற்று நோய் தடுப்பு பிரிவினர், புகை  அடித்து, டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இருந்து வந்தது.

ஆனால், தற்போது  அச்செயற்பாடுகள் இடம்பெறவில்லை என, பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .