2025 மே 21, புதன்கிழமை

கிளிநொச்சியில் கடும் வரட்சி; ‘34,785 பேர் பாதிப்பு’

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சியில் நிலவும் வரட்சி காரணமாக, 9,933 குடும்பங்களைச் சேர்ந்த 34,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதங்கமைய, கண்டாவளை பிரதேசத்தில், 666 குடும்பங்களைச் சேர்ந்த 2,533 பேரும் கரைச்சியில், 4,145 குடும்பங்களைச் சேர்ந்த 14,780 பேரும் பூநகரியில், 4,185 குடும்பங்களைச் சேர்ந்த 14,634 பேரும் பளையில், 937 குடும்பங்களைச் சேர்ந்த 2,838 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நிலவும் கடும் வரட்சி காரணமாக பொதுமக்கள் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, கால்நடைகளும் குடிநீரின்றி அலைவதைக் காணக்கூடியதாக உள்ளது.

எனவே, வருகின்ற சில மாதங்களுக்கு, வரட்சியை எதிர்கொள்கின்ற அளவுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .