2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்,சண்முகம் தவசீலன்

சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்கும் வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கிளிநொச்சியில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை 10 மணிக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில், வடக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த போராட்டம் இரு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டன.

ஒரு தரப்பினர் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு ஏ9 வீதியில் தமது எதிர்ப்பை வெளியிட்டவாறு சென்றனர். மற்றைய தரப்பினர் தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கந்தசுவாமி கோவில் முன்பாக தமது எதிர்ப்பை தொடர்ந்து வெளியிட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .