Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாடு செய்த உடல் ஆரோக்கியத்துக்கும் சமூக விழிப்புணர்வுக்குமான நடைபவனியொன்று, கிளிநொச்சியில் நேற்று (04) நடைபெற்றது.
கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் காலை 6.45 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபவனியானது, 8.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நிறைவுப்பெற்றது.
இதில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், யாழ். பல்லைக்கழக கிளிநொச்சி வளாகங்களான தொழில்நுட்பப் பீடாதிபதி திருமதி சிவமதி, விவசாய பீட பீடாதிபதி சூரியகுமார்,
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி.கமலராஜன், யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளாரும் கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் இணைப்பாளருமான மருத்துவர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூகத்தில் ஏற்பட்டுள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு, வீதி விபத்துகளைத் தடுத்தல், சுத்தமான சூழலைப் பேணுதல் போன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது.
இந்த நடைபவனியானது, அடுத்த வாரமும் கிளிநொச்சி இராமநாதபுரம் பாடசாலையில் இருந்து வட்டக்கச்சி மத்திய கல்லூரி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago