Niroshini / 2021 நவம்பர் 02 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்
சௌபாக்கியா திட்டத்தினூடாக வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு விதைப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வுஇ கிளிநொச்சி - இரணைமடு, கனகாம்பிகை கோவில் மண்டபத்தில், கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தலைமையில், நேற்று (01) நடைபெற்றது.
நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை, 'சௌபாக்கியா வாரம்' எனும் தொனிப்பொருளில், சௌபாக்கியா வீட்டுத் தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்பப் பணிகளின் ஒரு கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட விதைப் பொதிகள் வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் விஞ்ஞானி அரசகேசரி, பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜகோபு, விவசாய விதை உற்பத்தி ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கைக்கான விதை பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


10 minute ago
32 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
38 minute ago
1 hours ago