2025 மே 23, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் தொடர்ந்தும் வறுமை நிலை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 மார்ச் 26 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டம் தொடர்ந்தும் வறுமையான மாவட்டமாகவே காணப்படுகின்றது என்று மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம்; தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம் தொடர்ந்தும் வறுமையான மாவட்டமாகவே காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இருந்து இந்த நிலமை தொடச்சியாகவே காணப்படுகின்றது என்பதை புள்ளிவிபரங்களின் ஊடாக அறியமுடிகின்றது.

அதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அந்தக்காரணங்களை தொடர்ந்து சொல்லிக்;கொண்டு அதே நிலையில் இருப்பது என்பது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்கு ஒரு சாதகமாக அமையாது.

அந்த அடிப்படையில் இங்குள்ள பிரச்சனைகள் குறைபாடுகளை அடையாளம் கண்;டு முன்னோக்கி நகர வேண்டும் என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X