2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக்காட்டுவதாக, கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் நேற்று (02)  நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த வலயக்கல்விப்பணிப்பாளர்,

கடந்த சில ஆண்டுகளாக தரம் 1 இல் மாணவர்கள் இணைவது மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 565 மாணவர்கள் தரம் 1 இல் இணைந்து கொண்டனர். இதே போன்று 2017ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 319 மாணவர்கள் தரம் 1 இல் இணைந்த கொண்டனர். 2018 ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 180 மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளனர். இவ்வாறு மாணவர்களின் இணைவு வீதம் மிகக்குறைவடைந்து செல்கின்றது.

இவ்வாறு குறைவடைந்து செல்வதுக்கு இந்த மாவட்டத்தில் உள்ள பிறப்பு வீதத்தின் குறைவையே அவதானிக்க முடிகின்றது.

பிறப்பு வீதங்களை அதிகரிப்பதுக்கான பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X