2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் வாய், முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

Freelancer   / 2022 ஏப்ரல் 29 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை  முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர
சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர்
வைத்திய அதிகாரி  சுகந்தன் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி
சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த
சிகிச்சைகளை  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வாய், முகம், தாடை விசேட வைத்திய நிபுணர் மா. தவராஜாவினால் மேற்படி சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X