2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிளிநொச்சியில் விசேட சோதனை

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில், பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகன்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை, இன்று (10) காலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது.

இதன்போது, பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் ஓட்டோக்கள் உட்பட ஏனைய வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

மாணவர்களின் பாதுகாப்பு,  விபத்துகளைத் தவிர்க்கும் நோக்குடன், குறித்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார், இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில், பிள்ளைகளை ஏற்றி வருதல் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .