2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 2ஆவது தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு .தமிழ்ச்செல்வன்  

 

கிளிநொச்சி மாவட்டத்தில், நாளை (6) முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாவதாக, கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரி, உருத்திரபுரம் ஆரம்ப வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகா வித்தியாலயம், பாரதிபுரம் மகா வித்தியாலயம், புன்னை நீராவி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, பிரமந்தனாறு கிராம சேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, கல்மடுநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, முருகானந்தா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, பரந்தன் கிராம சேவையாளர் அலுவலகம், முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய தடுப்பூசி நிலையங்களில், காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X