2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 200 தொற்றாளர்கள்

Niroshini   / 2021 ஜூன் 01 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - அறிவியல்நகரில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில், மே மாதம் மாத்திரம் 200 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளிலும் அண்ணளவாக 4,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் அவர்களில் கடந்த மாதம் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் 1,144 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 200 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மற்றைய ஆடைத் தொழிற்சாலையில் 555 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சாந்தபுரம் கிராமத்தில்  அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால், குறித்த கிராம் கடந்த 29ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை விடயத்தில் மாவட்ட சுகாதார துறை அதிகளவு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X