Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
தற்போது நிலவி வருகின்ற வரட்சியான வானிலை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் 8,839 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகபிரிவுகளிலும் 50 கிராமசேவையாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டதாகவும் பூநகரி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச செயலகபிரிவில் 20க்கும் மேற்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகளிலும், கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 15க்கும் மேற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளிலும் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தை இயன்றளவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், வரட்சி காரணமாக குளங்களின் நீர் மட்டங்களும் குறைந்துள்ளதுாகத் தெரிவித்த அவர், வட மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய குளமான இரணைமடுக் குளத்தைப் பொறுத்தவரையில் 36 அடிகொள்ளளவைக் கொண்டதெனவும் ஆனால் தற்போது தற்போது 9 அடிமட்டத்தில் நீர் காணப்படுவதாகவும் கூறினார்.
மேலும், கிளிநொச்சி நகரையும் அதனை அண்டியப் பகுதிகளிலும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் விநியோகிப்படுகின்ற குடி நீரானது இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி குளத்துக்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்தே சுத்திகரிக்கரிக்கப்பட்ட நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வரட்சி தொடருமாக இருந்தால், குடிநீர் வழங்குவதும் சிரமமாக இருக்கும். இரணைமடுக் குளத்தை நம்பி விவசாயம் செய்த கமக்கார அமைப்புகள் சில தங்களுடைய நெற்பயிர்ச் செய்கைக்கான நீரை பெற்றுக் கொள்வதில் மும்முரமாகவுள்ளனர்.
இக்கட்டான ஒரு சூழலில் நெற்பயிர்களுக்கு நீரை வழங்குவது ஒருகட்டாய தேவையாகவுள்ள அதேநேரம், குடிநீர் தேவைக்கும் நீரை வழங்க வேண்டிய சந்தர்ப்பத்திலேயே எவ்வாறு நீரை முகாமைத்துவம் செய்வது என்பதில் நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.
அத்தியாவசிய தேவையாக காணப்படும் குடிநீருக்கான விநியோகத்தில் நாம் அக்கறையாக இருக்கின்றோம். இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 8 அடிக் குறைவாக இருக்குமேயானால், குடிநீருக்கு பயன்படுத்துவதில் பெரும் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.
அதன் காரணமாக, நாம் குளத்தில் இருந்து நீரைபயிர்ச் செய்கைக்கு விடுவிப்பது என்பது தொடர்பாக இணக்கப்பாட்டை எட்டவில்லை. என்றாலும் தொடர்ச்சியாக கமக்கார அமைப்புகள் தமது வேண்டு கோளை முன்வைத்து வருகின்றார்கள். இந்த நிலைமையில்தான் தற்போது நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
மழை பெய்தால் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளமுடியும் என்கின்ற நம்பிக்கை உள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago