Editorial / 2021 ஜூன் 23 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில், அம்பாள்குளம் பொருளாதார
சந்தைக்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார்.
கிளிநொச்சி செல்வநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர், நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
உந்துருளியில் பயணித்தவரை, பட்டா அல்லது மகேந்திர ரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவருக்கு தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்றனர்.
இருப்பினும், விபத்து இடம்பெற்ற இடத்திலேயே அவர், இறந்துவிட்டார் எனத் தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.



1 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Feb 2026